வேறுவேறு செல்ஃபோன்களை காட்டச்சொல்லி செல்ஃபோனை திருடிக்கொண்டு ஒருவன் ஓடிய திருடன்.!
திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள செல்ஃபோன் விற்பனை கடை ஒன்றில், செல்ஃபோன் வாங்குவது போல் நடித்து ஊழியரை திசை திருப்பி 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோனை திருடிக்கொண்டு ஒருவன் ஓடிய காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று மாலையில் அரங்கேறிய இந்த திருட்டு தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments